திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1199 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1199பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே – நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது – என் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள் நீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை – பயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான் வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான்) 2
பிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும் அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன் பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே –3-6-2
பதவுரை Show / Hide
பிணி அவிழும் நறு நீலமலர்கிழிய, Pini Avizhum Naru Neelamalarkizhiya - கட்டு அவிழ்கின்ற மணம் மிக்க நீலோற்பல மலர்கள் கிழியும்படியாக
பெடையோடும் அணி மலர்மேல் மது நுகரும், Pedaiyodum Ani Malarmel Madhu Nukarum - பேடையுடனே அழகிய அந்த மலர்களிலிருந்துகொண்டு மதுபானம் பண்ணுகிற
அறுகால சிறு வண்டே, Arugala Siru Vande - ஆறு கால்களையுடைய சிறியவண்டே!
மணி கெழுநீர்மருங்கு அலரும் வயல், Mani Kezhuneermarungu Alarum Vayal - அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் நாற்பக்கத்திலும் விகளிக்கப்பெற்ற கழனிகளையுடைய
ஆலி, Aali - திருவாலியிலே யெழுந்தருளியிருக்கிற
மணவாளன் பணி, Manavaalan Pani - மணவாளப்பிள்ளை போன்ற எம்பெருமானுடைய செய்தியை
அறியேன், Ariyen - இன்னதென்று நானறிகின்றேனில்லை;
என் பயலே நோய் உரையாய், En Payale Noi Uraiyaai - என்னுடம்பு வேறுபட்டிருந்தலாகிற நோயை சொல்லுவாயாக.