திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1181 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1181பெரிய திருமொழி || (3-4–ஒருகுறளாய்) (காழிச்சீராம விண்ணகம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆளிட்டு செய்தல் -ஆயுதங்களாலே அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே ஆஸ்ரித விரோதியை தானே கை தொட்டு திரு உகிராகிற வேலாலே அழியச் செய்து அத்தாலே வந்த சுத்தியை உடையவன் திருவடிகளைக் கிட்ட வேண்டி இருப்பீர்-ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும் ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று) 4
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண் நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத் தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே த்ண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால் செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே –3-4-4
பதவுரை Show / Hide
முன் நாள், Mun Naal - முற்காலத்தில்
பஞ்சிய மெல் அடி            பின்னை திறந்து, Panjiy Mel Adi Pinnai Thirandhu - பஞ்சு போன்று மிருதுவான திருவடிகளையுடைய  நப்பின்னைப் பிராட்டிக்காக
பாய் விடைகள் ஏழ் அடர்ந்து, Pai Vidhaigal Ezhu Adarndhu - மேல் விழுந்து நலியுமியல்வுடைய ரிஷபங்களேழையும் வலியடக்கினவனாயும்
பொன்னன் பை பூண் நெஞ்சு இடந்து, Ponnan Pai Poon Nenju Idanthu - இரணியாசுரனுடைய அழகிய ஆபரணங்களணிந்துள்ள மார்வை பிளந்து
குருதி உக உகிர்வேல் ஆண்ட நின்மலன், Kuruthi Uga Ugirvel Aanda Ninmalan - ரத்தம் பீறிப்புறப்படும் படி நகங்களையே வேலாயுதமாகக் கொண்டு வியாபரித்தவனாயுமுள்ள பரிசுத்த பரமாத்மாவினது
தான் அணைகிற்பீர், Thaan Anaikirbeer - திருவடிகளை சேர விரும்பும் அன்பர்களே!
நீலம், Neelam - (மாடங்களிற் பதித்த) நீல ரத்னங்கள்
மாலை தஞ்சு உடைய இருள் தழைப்ப, Maalaithanju Udaiya Irul Thazhaippa - அந்திப் பொழுதை ஆதாரமாகவுடைய இருட்டை அதிகப்படுத்தவும்
ஆங்கே தரளம் தண் மதியின் நிலா காட்ட, Aange Tharalam Than Mathiyin Nila Kaata - அவற்றின் நடுவே யழுத்தின முத்துக்கள் குளிர்ந்த சந்திரனது நிலாவைக் காட்டவும்
பவளம் தன்னால், Pavalam Thannal - (இடையிடையே அழுத்தப்பட்ட) பவழங்களாலே
சுடர் செம் வெயில் விரிக்கும், Sudar Sem Veyil Virikkum - (உதயகாலத்து) ஸூர்யனுடைய சிவந்த காந்தியைப் பரப்பவும் பெற்று
அழகு  ஆர், Azhagu Aar - அழகு பொருந்தியுள்ள