திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1169 | பெரிய திருமொழி || (3-3–வாட மருதிடை) (தில்லைத் திருச்சித்ரகூடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன் என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி செவ்வைப் பூவைத் தூவ வருமவன்) 2 | பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்
மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே –3-3-2 | பதவுரை Show / Hideபேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட இது, Pei Magal Kongai Nanju Unda Ithu - “பேய்ச்சியான பூதனையினுடைய முலையில் (தடவியிந்த) விஷத்தை (அம்ருதமாக) பிள்ளை பரிசு என்றால் புலன் கெழு கோவியர், Pillai Parisu Endraal Pulankezhu Koviyaar - இச் சிறுபிள்ளளையின் செயல்” என்று சொல்லிக் கேட்டதும புலன் கெழு கோவியர், Pulankezhu Koviyaar - அழகிய இடைப் பெண்களானவர்கள், இவன், Ivan - “இக் கண்ணபிரான்” மா நிலமாமகள் மாதர் கேள்வன் என்றும், Maa Nilamaamagal Maathar Kaelvan Endrum - பூமிப்பிராட்டிக்கு வல்லபன்” என்றும் வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் பாடி, Vandu Un Poo Magal Nayagan Endrum Paadi - “வண்டுகள் மதுவுண்கிற தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்கு நாதன்” என்றும் சொல்லிப் பாடிக்கொண்டு தே(ன்) மலர்தாவ, Theen Malartava - செவ்விகுன்றாத புஷ்பங்களைப் பணிமாற வருவான், Varuvaan - (திருவாய்ப் பாடித் திருவீதிகளிலே) ஸஞ்சரித்த பெருமான் சித்திர கூடத்து உள்ளான், Siththira Koodathu Ullaan - (இப்போது) சித்திரகூடத்திலே ஸேவை ஸாதிக்கின்றான். |