திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1165 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1165பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த ஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர் சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்) 8
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர் மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-8
பதவுரை Show / Hide
மா வாயின் அங்கம் மதியாது கீறி, Maa Vaayin Angam Mathiyaadhu Keerii - கேசியென்னும் குதிரை வடிவாக வந்த அரசனுடைய வாயோடுகூட (அதன்) உடலையும் அலக்ஷியமாகப் பிளந்தொழித்தவனாயும், (- (தில்லை சேர்மின்கள்-.))
மழை மா முது குன்று எடுத்து, Mazhai Maa Muthu Kuntru Eduthu - (இந்திரன் பெய்வித்த) பெரு மழைக்காக பெரிய பழைய கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்தவனாயும்
ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து, Aayarthangal Ko Aay Nirai Meyththu - இடையர்கட்குத் தலைவனாய் பசுக்களை மேய்த்தவனாயும்
உலகு உண்ட, Ulaku Unda - (பிரளய காலத்தில்) உலகங்களை உண்டவனாயுமிருக்கிற
மாயன், Maayan - எம்பெருமானுடைய
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர், Kurai Maa Kazhal Koodum Kurippu Udaiyeer - ஆபரவொலி பொருந்திய சிறந்த திருவடிகளை சேர வேணுமென்னும் நினைவுடைய அன்பர்களே!,
மூவாயிரம் நான்மறையாளர், Moovaayiram Naanmaraiyalar - மூவாயிரம் பிராமணர்கள்
நாளும் முறையால் வணங்க, Naalum Muraiyhaal Vananga - நாள்தோறும் முறைமைப்படி வந்து பணியப்பெற்று
அணங்கு ஆய சோதி, Anangu Aaya Sothi - அப்ராக்ருதமான தேஜஸ்ஸையுடையனான
தேவாதி தேவன், Devaadhi Devan - ஸர்வேசுரன்
திகழ்கின்ற, Thigazhkindra - விளங்குகின்ற