திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1160 | பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் – ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து செம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 3 | வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-3 | பதவுரை Show / Hideவம்பு உண் பொழில் சூழ் உலகு, Vambu Un Pozhil Soozh Ulagu - வாஸனை வீசுகின்ற சோலைகளால் சூழப்பட்ட பூமியானது (- (தில்லை…சேர்மின்கள்-.)) விரி முதுநீர்வெள்ளம் உள் புக்கு அழுந்த, Viri Muthuneervellam Ul Pukku Azhundha - பரந்த கடல் வெள்ளத்தினுள்ளே புகுந்து மூழ்கிப் போக அன்று, Anru - அக்காலத்து, வெம்பும் சினம் புனம் கேழல் ஒன்று ஆய் எடுத்தான், Vembum Sinam Punam Kezhal Onru Aayi Eduththan - மிக்க கோபத்தை யுடைத்தாய் விலக்ஷணமான காட்டு வராகத் திருவுருவாகி (அப்பூமியை அங்கு நின்றும்) உத்தரிப்பித்துக் கொணர்ந்த பெருமானுடைய அடி போது அணைவான் விருப்போடு இருப்பீர், Adi Podhu Anaivan Viruppodu Iruppir - பாதாரவிந்தத்தை சாரவேணுமென்னும் ஆசை கொண்டிருக்கும் அன்பர்களே!, மன்னவன் பல்லவர்கோன், Mannavan Pallavarkon - பல்லவ ராஜன் பை பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து, Pai Ponnum Muththum Maniyum Konarndhu - அழகிய பொற்பூக்களையும் முத்துக்களையும் மாணிக்கங்களையும் கொண்டு வந்து (ஸமர்ப்பித்து) படை பணிந்த, Patai Panintha - தனது பரிவாரங்களோடுகூட ஆச்ரயிக்கப்பெற்றதும் செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த, Sembon Mani Matangal Sulndha - அழகிய பொன்னாலும் ரத்னங்களாலும் செய்யப்பட்ட மாடங்களால் சூழப்பட்டதுமான |