திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1114 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1114பெரிய திருமொழி || (2-7–திவளும்) (திருவிடவெந்தை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே விட்டுக் கொண்டு இருந்தால் போலே இவளைப் பெறுகைகாக ஸ்ரீ திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் – என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால், வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை மாயனே! என்றுவாய் வெருவும், களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோ டவலம்சேர்ந் திருந்த, இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. –2-7-7
பதவுரை Show / Hide
உளம் கனிந்திருக்கும், Ulam Kanindhirukkum - நெஞ்சு கனிந்திருக்கின்றாள்; (- (இடவெந்தை எந்தை பிரானே!- ;) (இப்பெண் பிள்ளை எப்போதும் உன்னையே சிந்தித்திருக்கையாலே) (என் நினைந்திருந்தாய்!-;))
உன்னையே பிதற்றும், Unnaiye Pithatrum - உன்னைப்பற்றியே வாய் பிதற்றுநின்றாள்;
உனக்கு அன்றி, Unakku Andri - உன்விசயத்தில் தவிர
எனக்கு, Enakku - என்விசயத்தில்
அன்பு ஒன்று இலள, Anbu Ondru Ilala - அன்பு சிறிதும் உடையளல்லள்;
வளம் கனி பொழில் சூழ்மாலிருஞ் சோலை மாயனே என்று வாய் வெருவும், Valam Kani Pozhil Soozhmalirunj Cholai Mayane Endru Vaai Veruvum - செழிப்பான பழங்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட திருமாவிருஞ் சோலையிலெழுந்தருளியிருக்கிற ஆச்சரியனே! என்று வாய் வெருவுகின்றாள்;
களங்கனி முறுவல் காரிகை, Kalankani Muruvai Karikai - களாப்பழம்போல் இனிதான முறவலையும் அழகையும் உடையளாய்
பெரிது கவலையோடு அவலம் சோர்ந்திருந்த, Peridhu Kavalaiyodu Avalam Sorndhirundha - மிக்க மனக்கவலையும்; இளைப்பும் உடையளாயிருக்கிற
இள க(ன்)னி இவளுக்கு, Ila Kanini Ivalukku - இளங் கன்னியாகிய இம்மகள் திறத்திலே