திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1093 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரப்பை உடைத்தான பூமியைத் திரு எயிற்றாலே கிழியும் படி இடந்தவனை –உடம்பு நோவ வ்யாபரித்த படி சொல்லுகிறது – பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து லோகத்தை அளந்து கொண்டவனை – எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை – அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான் இன்று இங்கே காணப் பெற்றேன் என்கிறார் – ஆறாம் பாசுரத்தில்) 6 | கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. –2-5-6 | பதவுரை Show / Hideதடகடலுள், Thadakadalu - விசாலமான திருப்பாற் கடலிலே பணங்கள் மேவி, Panangal Mevi - (திருவனந்தாழ்வானது) படங்களின் கீழே பொருந்தி கிடந்தானை, Kidandhaanai - பள்ளி கொள்பவனும், கிளர் பொறிய, Kilar Poriy - கிளர்ந்த பலவகைப் புள்ளிகளையுடைய மறி, Mari - (மாரிசனென்னும்) மாயாமிருகம் திரிய, Thiriya - (எதிரே வந்து) ஸஞ்சரீக்க அதனின் பின்னே படர்ந்தானை, Adanin Pinne Padarnthaanai - அதன் பின்னால் தொடர்ந்து சென்றவனும் படு மதத்த களிற்றின், Padu Mathath Kalittrin - ஒழுகுகின்ற மதநீரையுடைய (குவலயாபீடமென்னும்) கொம்பு பறித்தானை, Kombu Pariththaanai - தந்தங்களை முறித்து அவ்யானையை முடித்தவனும் வளை மருப்பின் ஏனம் ஆகி, Valai Maruppin Yenam Aagi - வளைந்த கோரப்பற்களையுடைய வராஹ ரூபியாகி பார் இடத்தை, Paar Idaththai - விசாலமான பூமியை எயிறு கீற இடந்தானை, Eiyiru Keera Idanthanai - பற்களாலே கொத்தி (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்தவனும் இரு நிலனும், Iru Nilanum - விசாலமான இந்நிலவுலகும் பெரு விசும்பும், Peru Visumbum - பெரிய மேலுலகங்களும் எய்தா வண்ணம், Eidha Vannam - திருவடிகளுக்குப் போராதென்னும்படி (மிக வளர்ந்து) கடந்தானை, Kadandhaanai - உலகளந்தவனுமான எம்மானை, Emmaanai - எம்பெருமானை |