திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1090 | பெரிய திருமொழி || (2-5–பாராயது) (திருகடல்மல்லை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ப்ராப்தி உபாயங்களில் பெரு நெறியாய் உள்ளவனை –ஜகத்தை அடைய ரஷிக்க கடவனாய் இருக்கிறவனுடைய ரஷணத்துக்கு நான் இப்போது விஷய பூதன் ஆனேன் என்கிறார்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய் உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே. –2-5-3 | பதவுரை Show / Hideஉலகு உய்ய, Ulaku Uyya - (ஸ்ரீமந்நாராயண னொருவனே மூன்று வடிவுகொண்டு காரியஞ் செய்கையாலே) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களாலே) உலகங்கள் வாழ்வதற்காக (- (நான் கண்டுகொண்டேன்..)) உடம்பு உருவில், Udam Bu Uruvil - சரீ ரசரீரிபாவத்தையிட்டுப் பார்க்குமளவில் மூன்று ஒன்று ஆய், Moondru Ondru Aay - மூன்று தத்துவமும் ஒருபடியாய் மூர்த்தி வேறு ஆய்நின்றானை, Moorthi Veeru Aayninraanaai - (உண்மையில்) ஸவ்ரூபம் வேறுபட்டு நிற்குமவனும் அன்று, Andru - கண்ணனாகப் பிறந்த அக்காலத்து பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய விடம், Vidam - (முலையில் தடவியிருந்த) விஷத்தை பருகு, Paruku - பானம்பண்ணின வித்தகனை, Viththakanai - ஆச்சரீயபூதனும் கன்று மேய்த்து விளையாட வல்லானை, Kanru Maeyththu Vilaiyaada Vallaanaai - கன்றுகளை மேய்த்து விளையாடுகைக்காக வந்து பிறந்தவனும் வரை மீ கானில், Varai Mee Kaanil - மலைமேலுள்ள காடுகளிலே தடம், Thadam - தடாகங்களிலே பருகு, Paruku - (கன்றுகளுக்கு நீர் குடிக்கும் விதத்தைப் பயிற்றுவிக்கைக்காகத் தான் இறங்கிக் கையை முதுகிலே கட்டிக் கொண்டு) தண்ணீர் குடித்தவனும் கரு முகிலை, Karum Mugilai - காளமேகம் போன்றவனும் தஞ்சை கோயில், Thanjai Koyil - தஞ்சை மாமணிக்கோயிலிலே தவம் நெறிக்கு ஓர் பெரு நெறியை, Thavam Nerikku Oru Peru Neriyai - தன்னைக் கிட்டுகைக்கான உபாயங்களிலே சிறந்த உபாயம் தானாக நிற்பவனும் வையம் காக்கும், Vaiyam Kaakkum - உலகத்தைக் காப்பதற்காக கடு பரி மேல் கற்கியை, Kadu Pari Mel Karkkiyai - கடுநடையுடைய குதிரையின் மேலே கல்கியவதாரம் செய்யப்போகிறவனுமான எம்பெருமானை கடி பொழில் சூழ் கடல் மல்லை தல சயனத்தே, Kadi Pozhil Soozh Kadal Mallai Thala Sayanatthae - மணம்மிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கடன் மல்லையிலே |