திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1080 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1080பெரிய திருமொழி || (2-4–அன்றாயர்) (திருநீர்மலை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நில மன்னனுமாய் உலகு -ஆண்டவனுக்கு ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனைச் சொல்லுதல்-அன்றிக்கே பூ பார நிர் ஹரணம் பண்ணின படியைச் சொல்லுகையாலே ஸ்ரீ கிருஷ்ணனைச் சொல்லுதல்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில், புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில், பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர் நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. –2-4-3
பதவுரை Show / Hide
அணி ஆர் உருவில், Ani Aar Uruvil - அழகுபொருந்திய திருமேனியிலே (- (மா மலை ஆவது நீர்மலையே-.))
அடல் ஆழியினால், Adal Azhiyinai - தீக்ஷ்ணமான திருவாழியோடு கூட
அலம், Alam - கலப்பையையும்
மன்னும் அடல் சுரி சங்கம், Mannum Adal Suri Sangam - (எதிரிகட்கு) நித்யபயங்கரமான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும்
எடுத்து, Eduthu - தரித்துக் கொண்டிருப்பவனாயும்
முன், Mun - முன்னொருகால்,
புலம் மன்னுவடம் புனை கொங்கையினாள், Pulam Mannuvadam Punai Kongaiyinai - மநோஹரமான முத்து வடங்களணிந்த முலையை யுடையளான பூமிப் பிராட்டியினுடைய
பொறை, Porai - பாரமானது
தீர, Theera - தொலையும்படி
ஆள் அடு வாள் அமரில், Aal Adu Vaal Amarlil - ஆண்களை யெல்லாம் முடிக்கிற மஹத்தான யுத்தத்திலே
பல மன்னர் பட, Pala Mannar Pada - பல அரசர்கள் நசிக்கும்படி (செய்தவனாயும்)
பகலோன் மறைய, Pagalon Maraiya - ஸூர்யன் மறையும்படியாக
சுடர் ஆழியினை பணி கொண்டு, Sudar Azhiyinai Pani Kondu - ஒளிமிக்க திருவாழியைக் காரியங் கொண்டவனாயும்
அணிசேர் நிலம் மன்னனும் ஆய், Anicher Nilam Mannanum Aay - அழகிய இந்நிலத்திற்கு நாயகனாயிருந்துகொண்டு
உலகு ஆண்டவனுக்கு, Ulaku Aandavanukku - உலகங்களை ரக்ஷித்தவனாயுமிருக்கிற பெருமானுக்கு
இடம், Idam - இருப்பிடம்