திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1062 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் -எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. –2-2-5 | பதவுரை Show / Hideபண்டு, Pandhu - முன்பொரு காலத்தில் பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு, Paalan Aagi Nyaalam Ezhum Undu - சிறு குழந்தையாய் உலகங்களை யெல்லாம் திரு வயிற்றிலே வைத்து ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஆலந்தளிரின் மேலே சால நாளும், Saal Naalum - வெகு நாள் வரையில் பள்ளி கொள்ளும், Palli Kollum - சயனித்திருந்த தாமரை கண்ணன், Thamarai Kannan - புண்டரீகாக்ஷன், எண் இல் நீலம்;, En Il Neelam - எண்ணிறந்த நெய்தற் பூவிலே ஆர், Aar - படிந்த வண்டு, Vandu - வண்டுகள் உண்டு, Undu - (அப்பூக்களிலுள்ள தேனைப்)பருகி வாழும், Vaalum - வாழப்பெற்ற அம் தண், Am Than - அழகிய குளிர்ந்த நெய்தல் கழனி, Neithal Kazhani - நெய்தல் கழனிகளையும் ஏலம் நாறும், Elam Naarum - பரிமளம் கமழ்கின்ற பை புறவில், Pai Puravil - பரந்த சோலைகளையுமுடைய எவ்வுள், Evvul - திருவெவ்வுளூரிலே கிடந்தான், Kidandhaan - சயனித்திருப்பவன். |