திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1058 | பெரிய திருமொழி || (2-2–காசையாடை) (திருஎவ்வுளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறிவுடையார் -ராமோ ராமோ ராம -என்னத்-தன் பக்கல் நசை உடையார்கள் இப்படி ஏச – இவை இரண்டையும் கேட்டு-திரு வெவ்வுளிலே கண் வளர்ந்தான் ஆயிற்று-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1 | காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. –2-2-1 | பதவுரை Show / Hideகாசை ஆடை, Kaasai Aadai - காஷாய வஸ்த்ரத்தினால் மூடி, Moodi - உடம்பை மறைத்துக்கொண்டு ஓடி, Oodi - (பஞ்சவடிக்கு) ஓடிவந்து காதல் செய்தானவன், Kaadhal Seithaanavan - (பிராட்டியிடத்தில்) ஆசை கொண்டவனான இராவணனுடைய ஊர், Oor - ஊராகிய இலங்கையானது நாசம் ஆக நம்ப வல்ல, Naasam Aaga Namba Valla - நாசமாகும்படி ஸங்கல்பித்த நம்பி, Nambi - பரிபூர்ண சக்தியையுடையவனும் நம்பெருமான், Namberumaan - நமக்கு ஸ்வாமியும் வேயின் அன்னதோள் மடவார், Veiyin Annathol Madavaar - மூங்கிலோடு ஒத்த தோள்களையுடைய இடைச்சியர் இவன் வெண்ணெய் உண்டான் என்று ஏச நின்ற எம்பெருமான, Ivan Vennai Undaan Endru Aesa Nindra Emperumaan - ‘இவன் வெண்ணெய் திருடி உண்டவன்’ என்று சொல்லிப்பரிஹஸிக்கும்படி நின்றவனுமான எம்பெருமான் எவ்வுள் கிடந்தான், Evval Kidanthaan - திருவெவ்வுளூரில் திருக்கண் வளர்ந்தருளா நின்றான். |