திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1052 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் – அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே –அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய வ்ருத்தியிலே அன்வயித்தாயோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5 | பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்!
எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-5 | பதவுரை Show / Hideஎன் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.)) பொங்கு, Pongu - கொம்புங்கிளையுமாகப் பணைத்து வளர்ந்திருக்கிற போதியும், Podhiyum - அரசமரத்தையும் பிண்டியும், Pindiyum - அசோகமரத்தையும் உடை, Udai - (தங்களுக்குத் தஞ்சமாக) உடையவர்களான புத்தர், Puththar - பௌத்தரும் நோன்பியர், Nonpiyar - அமணரும் பள்ளியுள் உறை தங்கள் தேவரும் தாங்களுமே ஆக, Palliyul Urai Thangal Thevarum Thangalume Aaga - தமது தேவாலயங்களிலேயுள்ள தங்களுடைய சாமிகளும் தாங்களுமேயாய் உலகமெங்கும் நிறைந்து கிடக்கச் செய்தேயும் (அந்த மதங்களில் நீ புகாமல்), எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும், Engum Vaanavar Thanavar Nirainthu Aeththum - தேவப்ரக்ருதிகளும் அஸூரப்ரக்ருதிகளும் எங்கும் சூழ்ந்துகொண்டு போற்றுமிடமான வேங்கடம், Vengadam - திருமலையிலே மேவி நின்று, Mevi Nindru - எழுந்தருளியிருந்து அருள், Arul - அருள்செய்கின்ற அம் கண் நாயகற்கு, Am Kan Nayakarukku - அழகிய திருக்கண்களையுடைய பெருமானுக்கு |