திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1050 | பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே – அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3 | இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும், வானிடைக்
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்,
வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், மீமிசை
அண்ட மாண்டிருப் பாற்கு அடிமைத்தொழில் பூண்டாயே. –2-1-3 | பதவுரை Show / Hideஎன் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.)) இண்டை ஆயின கொண்டு, Indai Aayin Kondo - புஷ்பமாலைகளை ஏந்திக் கொண்டு (தன் பக்கல்வந்து) ஏத்துவார், Aeththuvaar - ஸ்தோத்ரம் பண்ணுமவர்களான தொண்டாகள், Thondaagal - தாஸபூதர்களை உறவோடும், Uravodum - அவர்களுடைய ஸம்பந்த ஸம்பந்திகளோடுங் கூட கொண்டு போய், Kondupoi - இந்நிலத்தில் நின்றும் கொண்டுபோய் வானிடை, Vaanidai - பரமபதத்திலே இட அது கண்டு, Ida Adhu Kandu - (எம்பெருமான்) சேர்க்கிற படியைக் கண்டு, வண்டு வாழ், Vandu Vaal - வண்டுகள் களித்து வாழப்பெற்ற வடவேங்கடம்மலை கோயில் கொண்டு, Vadavaengadammalai Koyil Kondo - வடதிசையிலுள்ள திருமலையை திருக்கோயிலாகக் கொண்டு அதனோடும், Adhanodum - அந்தத் திருமலையையும் மீமிசை அண்டம், Meemichai Andam - நித்ய விபூதியான திரு நாட்டையும் ஆண்டு இருப்பாற்கு, Aandu Iruppaarku - ஆண்டு கொண்டிருக்கிற அப்பெருமானுக்கு |