Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 891 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
891திருமாலை || (எம்பெருமான் உடன் உறவு அறிந்தவருக்கு அகல ஒண்ணாது -என்கிறார்) 20
பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே
paayum neer,பாயும் நீர் - பாயா நின்றுள்ள காவிரி சூழ்ந்த
arangam thannul,அரங்கம் தன்னுள் - கோயிலிலே
paampu anai,பாம்பு அணை - சேஷ சயநத்திலே
palli kond,பள்ளி கொண்ட - கண் வளர்ந்தருளா நின்ற
maragatham uruvum,மரகதம் உருவும் - மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
thoalum,தோளும் - திருத் தோள்களும்
thooiya thaamarai kangalum,தூய தாமரை கண்களும் - பரிசுத்தமான தாமரை மலர் போன்ற திருக் கண்களும்
thuvar ithazh,துவர் இதழ் - சிவந்த அதரமும்
pavalam vaayum,பவளம் வாயும் - பவளம் போன்ற வாயும்
maayanaar,மாயனார் - ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
thiru nal maarvum,திரு நல் மார்வும் - பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
aaya seer mudiyum,ஆய சீர் முடியும் - வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
thaesum,தேசும் - (இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
adiyaroarkku,அடியரோர்க்கு - ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
akalalaamo,அகலலாமோ - இழக்கத் தகுமோ?