திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 591 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
591நாச்சியார் திருமொழி || 9 - சிந்துரச் செம்பொடி (திருமாலிருஞ்சோலை அழகரை வழிபடுதல்) 5
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில் தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே
பதவுரை Show / Hide
துங்கம் மலர் பொழில் சூழ், Thungam Malar pozhil soozh - ஓங்கின மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த
திருமாலிருஞ் சோலை, Thirumaalirunjolai - திருமாலிருஞ்சோலையில்
நின்ற, Nindra - நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கிற
செம் கண் கருமுகிலின், Sem Kan Karumukilin - செந்தாமரை போன்ற திருக் கண்களையும் காள மேகம் போன்ற வடிவையுமுடைய எம்பெருமானுடைய
திருவுருப் போல், Thiruvuru pol - அழகிய வடிவம் போலே
மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள், Malar Mel Thongiya Vandu Inankaal - மலர் மேல் தங்கி யிருக்கிற வண்டுக் கூட்டங்களே!
தொகு, Thogu - நெருங்கி யிருக்கின்ற
பூஞ்சுனைகாள், Poonjunaikaal - அழகிய சுனைகளே!
சுனையில் தங்கு, Sunaiyil Thangu - அச் சுனைகளில் உள்ள
செம் தாமரைகாள், Sem Thaamaraikaal - செந்தாமரை மலர்களே!
எனக்கு, Enakku - (உங்கள் யம தூதர்களாக நினைக்கிற) எனக்கு
ஓர் சரண் சாற்றுமின், Or Charan Satrumin - ஒரு பற்றுக்கோடு சொல்லுங்கள்