Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 545 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
545நாச்சியார் திருமொழி || 5 - மன்னு பெரும் (எம்பெருமானைக் கூவி அழைக்கும்படி குயிலை வேண்டுதல்) 1
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்
புன்னை, Punnai - புன்னை மரங்களும்
குருக்கத்தி, Kurukkathi - குருக்கத்தி மரங்களும்
நாழல், Naazhal - கோங்கு மரங்களும்
செருந்தி, Serundhi - சுர புன்னை மரங்களும் (இவை முதலிய பல மரங்கள் நிறைந்த)
பொதும்பினில், Pothumpinil - சோலையிலே
வாழும், Vaazhum - வாழுகின்ற
குயிலே!, Kuyile! - கோகிலமே!
மன்னு பெரும் புகழ், Mannu Perum Pugazh - நித்யமாய் அளவில்லாத புகழை யுடையவனாய்
மாதவன், Maadhavan - ஸ்ரீ: பதியாய்
மா மணி வண்ணன், Maa Mani Vannan - நீல மணி போன்ற நிறத்தை யுடையனாய்
மணி முடி, Mani Mudi - நவ மணிகள் அழுத்திச் சமைத்த திரு வபிஷேத்தை யுடையனாய்
மைந்தன் தன்னை, Maindhan Thannai - மிடுக்கை யுடையவனான எம்பெருமானை
உகந்தது காரணம் ஆக, Ugandhadhu Kaaranam Aaga - ஆசைப் பட்டதுவே ஹேதுவாக
என் சங்கு இழக்கும் வழக்கு, En Sangu Izakkum Vazhakku - என்னுடைய கைவளைகள் கழன்றொழியும்படியான நியாயம்
உண்டே?, Unde? - (உலகத்தில்) உண்டோ (இது வெகு அநியாயமாயிருக்கிறது) (இதற்கு நான் என் செய்வேன் என்கிறாயோ)
என் பவளம் வாயன், En Pavalam Vaayan - பவளம் போற் பழுத்த திருவதரத்தை யுடையனான எனது துணைவன்
வர, Vara - (என்னிடம்) வந்து சேரும்படி
எப்போதும் , Eppothum - இரவும் பகலும்
பன்னி இருந்து , Panni Irundhu - (அவனது திருநாமங்களைக்) கத்திக் கொண்டிருந்து
விரைந்து கூவாய், Viraindhu Koovai - சீக்கிரமாகக் கூவ வேணும்.