Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 496 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
496திருப்பாவை || இவ்வாய்ச்சிகள் “சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்” என்று வேறு புகலற்று வந்து விழுந்தோ மென்றதைக் கேட்டருளின கண்ணபிரான், கடுக உணர்ந்தருளி, “பெண்காள்! மிகவும் வருந்தி இவ்வளவும் வந்தீர்களே! உங்களிருப்பிடந் தேடி வந்து உங்களை நோக்குகை யன்றோ எனக்குக் கடமை! என் ஸ்வரூபத்தை நீங்கள் நன்கு உணர்வீர்களன்றோ? யாரேனும் பகைவர் கையிலகப்பட்டு வ்யஸநப் பட்டு நம்மிடம் வந்து முறைப்பட்டால், நான் அவர்களின் வருத்த மிகுதியைக் கண்ணுற்று, ஆ! ஆ!! உங்களுக்கு ஒரு வருத்தம் வருதற்கு முன்னமே வந்து உங்களை நோக்க வேண்டிய கடமையை யுடைய நான் அங்ஙனம் முந்துற வரப் பெறாதொழியினும் வருத்தம் நேர்ந்தவுடனே யாகிலும் வந்து உதவப்பெறலாமே’ அங்ஙனமும் வந்து உதவப் பெற்றிலேனே’ வருத்தமுற்ற நீங்களே உற்ற வருத்தத்தை என்னிடம் வந்து, முறையிட்டுக் கொள்ளும்படி நான் அந்ய பரனா யிருந்தொழிந்தேனே’ என்னுடைய இக்குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேணும்’ என்று அஞ்சி நடுங்கிக் கூறும் முறையையுடைய என் ஸ்வரூப ஸ்வபாவங்கள் உங்களுக்குத் தெரிந்தவையே யன்றோ உங்களை நான் இவ்வளவு வருத்த முறுத்தியதைப் பற்றிப் பொறை வேண்டுகின்றேன். இனி உங்கள் காரியத்தைக் குறையறத் தலைகட்டித் தருகின்றேன்: உங்களுக்கு நான் செய்யவேண்டுவதென்?” என்ன’ அதனைக் கேட்ட ஆய்ச்சிகள், “பிரானே! எங்களுடைய மநோ ரதம் இப்படி ரஹஸ்யமாக விண்ணப்பஞ் செய்யக் கூடியதன்று’ பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளி யிருந்து கேட்டருள வேணும்” என்று ஆஸ்தான 23
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலே நீ பூவைப்பூ வண்ணா
உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
மாரி, maari - மழைகாலத்தில்
மலை முழஞ்சில், malai muzhanjil - மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து, manni kidandhu - (பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும், urangum - உறங்கா நின்ற
சீரிய சிங்கம், seeriya singam - (வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று, arivurru - உணர்ந்தெழுந்து
தீ விழித்து, thee vizhithu - நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர், vaeri mayir - (ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை
பொங்க, ponga - சிலும்பும்படி
எப்பாடும், epaadum - நாற் புறங்களிலும்
பேர்ந்து, perndhu - புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி, udhari - (சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து, moori nimirthu - சோம்பல் முறித்து
முழங்கி, muzhangi - கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே, purappattu podharum aa polae - வெளிப் புறப்பட்டு வருவது போல
பூவை பூ வண்ணா, poovai poo vanna - காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!
நீ, nee - நீ
உன் கோயில் நின்று, un koyil ninru - உன்னுடைய திருக்கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி, ingganae poandharuli - இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று, un koyil ninru - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
கோப்பு உடைய, koppu udaiya - அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய, seeriya - லோகோத்தரமான
சிங்காசனத்து, singaasanathu - எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம், yaam vandha kaariyam - நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து, aaraaindhu - விசாரித்து
அருள், arul - கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavaay - ஏல் ஓர் எம்பாவாய்