Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 489 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
489திருப்பாவை || கீழ்ப் பத்துப்பாட்டுகளினால் பத்துப் பெண்களை உணர்த்தின படியைக் கூறியது – திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலங் குடிற்பெண்களையு முணர்த்தியவாற்றிற்கு உபலக்ஷணம். முந்துற முன்னமுணர்ந்த பெண்கள் உறங்குகின்ற மற்றைப் பெண்களை யுடையுமுணர்த்தித் தம்முடன் கூட்டிக்கொண்டு எல்லோரும் பெருங்கூட்டமாகத் திரண்டு ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை வாசலிற் சென்று சேர்ந்து, திருக்கோயில் காப்பானையும் திருவாசல் காப்பானையும் நோக்கித் ‘திருவாசல் திருக்காப்பு நீக்கவேணும்’ என்று இரக்கும்படியைக் கூறும் பாசுரம் இது 16
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
நாயகன் ஆய் கின்ற, Naayagan ai kindra - (எமக்கு) ஸ்வாமியாயிருக்கிற
நந்தகோபனுடைய, Nandhagopanudaiya - நந்தகோபருடைய
கோயில், Koyil - திரு மாளிகையை
காப்பானே, Kaappaane - காக்குமவனே!
கொடி, Kodi - த்வஜபடங்கள்
தோன்றும், Thondrum - விளங்கா நிற்கப்பெற்ற
தோரணம் வாசல், Thoranam vaasal - தோரண வாசலை
காப்பானே, Kaappaane - காக்குமவனே!
மணி, Mani - அழகிய
கதவம், Kadavam - கதவினுடைய
தாள், Thaal - தாழ்ப்பாளை
திறவாய், Thiravai - திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோ முக்கு, Aayar sirumi yaro mukku - இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன், Maayan - ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணிவண்ணன், Manivannan - நீலமணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்
நென்னலே, Nennale - நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான, Arai parai vaai nerndhaana - ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ, Thuyil ezha - (அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான், Paaduvaan - பாடுகைக்காக
தூயோம் ஆய், Thuyom ai - பரிசுத்தைகளாய்
வந்தோம், Vandom - (அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா, Amma - ஸ்வாமி!
முன்னம்முன்னம், Munnammunnam - முதல் முதலிலே
வாயால், vaayaal - (உமது) வாயினால்
மாற்றாதே, maattraadhe - மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம், nesam nilai kadhavam - கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையையுடைய கதவை
நீ, nee - நீயே
நீக்கு, neekku - நீக்க வேணும்