Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 478 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
478திருப்பாவை || நோன்பு நோற்கும் பெண்களில் ஒருத்தி, நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க இன்று செய்யக் கருதிய நற்கிரிசை நன்னர் நிறைவேறுமோ?’ என்று கேட்க; நாம் பகவந்நாம ஸங்கீர்த்தநம் பண்ணவே பாவங்களனைத்தும் தீயிலிட்ட பஞ்சு போல உருமாய்ந்தொழியுமாதலால் அத்திரு நாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணக் கடவையென்று அவளை நோக்கி மற்றொருத்தி உரைக்கும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு. 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
மாயனை, Maayanai - மாயச் செயல்களை யுடையவனும்
மன்னு வடமதுரை மைந்தனை, Mannu Vadamadurai Maindhanai - (பகவத் ஸம்பந்தம்) நித்யமாகப் பெற்றுள்ள வட மதுரைக்குத் தலைவனும்
தூய பெரு நீர், Thooya Peru Neer - பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை யுடைய
யமுனை துறைவனை, Yamunai Thuravani - யமுனை யாற்றங்கரையை நிரூபகமாக வுடையயவனும்
ஆயர் குலத்தினில் தோன்றும், Aayar Kulathinil Thondrum - இடைக் குலத்தில் விளங்கா நின்றுள்ள
அணி விளக்கை, Aani Vilakkai - மங்கள தீபம் போன்றவனும்
தாயை குடல் விளக்கஞ்செய்த, Thai Kudal Vilakkanjeydha - தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான
தாமோதரனை, Dhamodharanai - கண்ண பிரானை
நாம், Naam - (அடிச்சியோமாகிய) நாம்
தூயோம் ஆய் வந்து, Thuyoam Aay Vandhu - பரி சுத்தி யுள்ளவர்களாய்க் கிட்டி
தூ மலர்கள் தூய், Thoo Malarkal Thoo - நல்ல மலர்களைத் தூவி
தொழுது, Thozhudhu - வணங்கி
வாயினால் பாடி, Vaayinaal Paadi - வாயாரப் பாடி
மனத்தினால் சிந்திக்க, Manathinaal Sindikka - நெஞ்சார தியானம் பண்ண (அதன் பிறகு)
போய பிழையும், Poya Pizhaiyum - (சேஷ சேஷிபாவ ஜ்ஞான முண்டாவதற்கு) முன்பு கழிந்த பாவங்களும்
புகு தருவான் நின்றனவும், Pugu Tharuvaan Nindranavum - பின்பு (தன்னை அறியாமல்) வரக் கூடிய பாவங்களும்
தீயினில் தூசு ஆகும், Theeyinil Doosu Aagum - நெருப்பிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போம் (ஆன பின்பு)
செப்பு, Seppu - அவ் வெம்பெருமான் திரு நாமங்களைச் சொல்
ஏல் ஓர் எம் பாவாய்!, Ael Or Em Paavay! - ஏல் ஓர் எம் பாவாய்!