Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2323 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2323மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு நோக்கினான் என்கிற பிரசங்கத்தாலே ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் ஒரு நாட்டுக்காக அந்யாபிமானத்தால் வந்த ஆபத்தைப் போக்கி ரக்ஷித்தமை சொன்ன பிரசங்கத்தில் ஓர் ஊருக்காக விரோதிகளை போக்கி ரஷித்த படியைச் சொல்லுகிறார் – 42
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
கோவலன் ஆய், Kovalana Aay - இடையனாய்ப் பிறந்து
ஆநிரைகள், Aaniraigal - பசுக்கூட்டங்களை
மேய்த்து, Meeyththu - புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்
குழல் ஊதி, Kuzhal Oothi - புல்லாங்குழலை ஊதினவனாயும்
மா, Maa - குதிரை வடிவு கொண்டு நலியவந்த கேசி யென்னுமசுரனை
வலன் ஆய் கீண்ட, Valan Aay Keenda - ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்
மணி வண்ணன், Mani Vannan - நீலமணி போன்ற வடிவையுடையனாயும்
மேலி அரி உருவம் ஆகி, Maeli Ari Uruvam Aagi - பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு
இரணியனது ஆகம், Iraniyanathu Aagam - இரணியாஸுரனுடைய முரட்டுடலை
உகிரால், Ukiral - நகங்களினால்
கீண்டான், Keendaan - கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய
சினம், Sinam - சீற்றத்தை
தெரி, Theri - (நெஞ்சமே!) தெரித்துகொள்.