திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2210 | இரண்டாம் திருவந்தாதி || மாவாய் பிளந்த என்று ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆனவாறே – அது தன்னிலும் திரியட்டும் கால் தாழ்ந்து சுழி யாறு படுகிறார் – ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே-அதிலே சுழி யாறு படுகிறார்- மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் – 29 | மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு, – மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ. | பதவுரை Show / Hideதென் இலங்கை, Then Ilangai - அழகிய லங்காபுரி நீறு ஆக, Neeru Aaga - நீறாகியொழியும்படி எய்து, Eydhu - அம்புகளைச் செலுத்தி அழித்தாய், Azhiththaa - முடித்தவனே! மகன் ஆக கொண்டு எடுத்தாள், Mahan Aaga Kondu Eduththaal - உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய மாண்பு ஆய கொங்கை, Maanbu Aaya Kongai - அழகான முலையை அகன் ஆர உண்பன் என்று உண்டு, Akan Aara Unpan Endru Undu - வயிறார உண்ணக்கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து மகனை, Mahanai - புத்ரனான உன் விஷயத்திலே தாய், Thaai - உனது தாயாகிய யசோதை தேறாத வண்ணம், Theeradha Vannam - நம்பிக்கையற்றிருக்கும்படி திருத்தினாய், Thiruththinai - செய்துவிட்டாய். |